பிப்ரவரியில் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்?! வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 
ட்ரம்ப்


 
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிப்ரவரி மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி என்னை சந்திக்க வெள்ளை மாளிகைக்கு வருகை தருவார் என பதிவிட்டுள்ளார். இது குறித்து டிரம்ப் ” தொலைபேசியில் நீண்ட நேரம் நரேந்திர மோடியுடன் உரையாடினேன். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் அநேகமாக பிப்ரவரியில் வெள்ளை மாளிகைக்கு வருகை தரவுள்ளார். நாங்கள் இந்தியாவுடன் நல்ல உறவுடன் இருக்கின்றோம்" என கூறியுள்ளார்.  பிரதமர் மோடியுன் தொலைபேசியில் பேசியது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம்  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.  

ட்ரம்ப்


அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி தொலைபேசியில் நேற்று ஜனவரி 27ம் தேதி திங்கட்கிழமை பேசினாா். இதுகுறித்து  பிரதமா் மோடி 'எக்ஸ்' தளத்தில்  , 'அமெரிக்க அதிபராக 2 வது முறை பதவியேற்ற டிரம்ப்புக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு பரஸ்பரம் பலன் அளிக்கக் கூடிய நம்பகமான கூட்டுறவைத் தொடர வேண்டும் என்பதில் இருவரும் உறுதியாக உள்ளோம். இருநாட்டு மக்களின் நல்வாழ்வு, உலக அமைதி, வளமை மற்றும் பாதுகாப்புக்கு இருவரும் இணைந்து பணியாற்றுவோம்' என கூறியுள்ளார்.

மோடி

 இது குறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தொழில்நுட்பம், வா்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு   துறைகளில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் பேசினா். விரைவில் சந்திக்கவும் அவா்கள் தீா்மானித்தனா்' என  தெரிவிக்கப்பட்டது

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web