பகீர் வீடியோ... உடம்பில் பெட்ரோல் ஊற்றி போராட்டம்.. திடீரென 2 பேர் மீது தீப்பற்றியதால் அதிர்ச்சி!
பெட்ரோல் ஊற்றி போராட்டம் நடத்தி வந்த நிலையில், திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட 2 பேர் மீது தீப்பற்றி எரிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
1984ல் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு பூச்சிக்கொல்லி ஆலையில் பயங்கர விஷ வாயு கசிவு ஏற்பட்டது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த பயங்கர விஷ வாயு கசிவு விபத்தில், சுமார் 6,000 பேர் உயிரிழந்தனர்; லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இந்த பாதிப்பு இன்றும் தொடர்கிறது. இந்தப் பின்னணியில், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 40 ஆண்டுகளுக்குப் பிறகு போபால் யூனியன் கார்பைடு ஆலையில் இருந்து நச்சுக் கழிவுகள் அகற்றப்பட்டன.
#MadhyaPradesh: There was a protest against burning of toxic waste of Union Carbide of #Bhopal in #Pithampur. In protest, two youths sprinkled petrol on themselves. Suddenly someone set them on fire from behind. Both their lives were in danger.#BhopalGasTragedy pic.twitter.com/JWwKm8iQoH
— Siraj Noorani (@sirajnoorani) January 3, 2025
இவ்வாறு அகற்றப்படும் நச்சுக் கழிவுகளை பிதாம்பூர் என்ற இடத்தில் எரிக்கவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் பித்தாம்பூர் மக்கள் தங்கள் பகுதியில் நச்சுக் கழிவுகளை எரிக்கக் கூடாது என்று கடும் எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக நேற்று 2 பேர் உடலில் பெட்ரோல் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென பெட்ரோலை ஊற்றிய இருவரின் உடல்களிலும் தீப்பிடித்து பயங்கரமாக எரிந்தது. இதனால் அனைவரும் அலறியடித்து ஓடினர். பின்னர், இருவரும் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!