பெண் தொழிலாளியை தாக்கிய மில் மேனஜர் !! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

 
பெண் தொழிலாளியை தாக்கிய மில் மேனஜர் !! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

கோவையில் செயல்பட்டு வரும் நூற்பாலையில் பெண் தொழிலாளியை மேலாளர் ஒருவர் அடித்து துன்புறுத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, அந்த ஆலையின் மேனஜர் உட்பர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் தொழிலாளியை தாக்கிய மில் மேனஜர் !! காவல்துறையின் அதிரடி நடவடிக்கை!!

கோவை, சரவணம்பட்டியில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையும், தொழிலாளர்கள் தங்குவதற்கான விடுதியும் செயல்பட்டு வருகிறது. அந்த விடுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 22 வயது பெண் பணிபுரிந்து வந்துள்ளார். சம்பவ தினத்தன்று அந்த பெண் வேலைக்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபமடைந்த விடுதியின் காப்பாளர் ஒருவர் அந்த பெண்ணை கடுமையாக தாக்கியுள்ளார். அந்த பெண் தாக்கப்படும் சம்பவம் வீடியோ காட்சிகளாக இணையத்தில் வெளியான நிலையில், திமுக எம்பி செந்தில்குமார் தனது ட்விட்டரில் பகிர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலானது.

இந்த சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில், காவல்துறைக்கு புகாரும் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விசாரிக்க சென்ற போலீசார் விடுதியின் மேலாளர் லதா, காப்பாளர் முத்தையா ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் மேல் பெண்கள் வன்கொடுமை உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

From around the web