எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு.. தொண்டர்கள் அதிர்ச்சி!

 
நேதாஜி
இந்தியா சுதந்திரம் அடைய போராடியவர்களில்  முக்கியமானவர் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1945  ஆகஸ்ட் 18ம் தேதி தைவான் நாட்டின் தாய்பேய் நகரில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக  கூறப்பட்டு வருகிறது. இது குறித்த ஆதாரங்கள் ஏதும் இல்லை.இந்நிலையில் ஜனவரி 23ம் தேதி நேதாஜி  பிறந்த நாளில்   லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல் முக்கியமான பதிவு ஒன்றை போட்டிருந்தார்.

அந்த பதிவில்  ஆகஸ்ட் 18ம் தேதி 1945ல் நேதாஜி உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.அவரது இந்தப் பதிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும்  கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேதாஜி உயிரிழந்தது குறித்து எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ராகுல் எவ்வாறு தேதியை உறுதி செய்தார் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது தெற்கு கோல்கட்டாவின் பவனிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர்.

ராகுல்

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து அந்த  அமைப்பின் மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி  , 'ராகுல் மற்றும் அவரது கட்சியினர் இந்திய மக்களிடம் உள்ள நேதாஜியின் நினைவுகளை அழிக்க முயற்சிக்கின்றனர். இவர்களை இந்திய மக்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும். நேதாஜி குறித்து பொய்யான தகவலை பரப்பினால், அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்', எனக் கூறியுள்ளனர்.   

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web