பிரேசிலில் காவல்துறை சோதனை... 121 பேர் உயிரிழப்பு - மனித உரிமை அமைப்புகள் அதிருப்தி!

 
பிரேசில் உயிரிழப்பு

பிரேசிலின் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் பின்தங்கிய பகுதிகளில், சட்டவிரோத கும்பல்களை ஒழிக்கும் நடவடிக்கையாக காவல்துறையினர் மேற்கொண்ட பெரிய அளவிலான சோதனையில் 121 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் உயிரிழப்பு

அந்த பகுதியில் கடந்த சில வாரங்களாக குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வந்ததால், காவல்துறை சிறப்பு படையினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், உயிரிழந்த பலரின் உடல்களில் கத்திக்குத்து காயங்களும், உடல் சிதைவுகளும் காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்த நடவடிக்கையின் நியாயத்தன்மை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

பிரேசில் உயிரிழப்பு

மனித உரிமை அமைப்புகளும், உயிரிழந்தவர்களின் உறவினர்களும், “இது காவல்துறையால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் படுகொலை” என குற்றஞ்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பிரேசில் அரசு இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், காவல்துறை தங்களது நடவடிக்கை சட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெற்றதாகவும் விளக்கம் அளித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?