நடுரோட்டில் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவலர்... வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

 
பெண்ணை
 

சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது பரவியுள்ள ஒரு வீடியோ பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில், சீருடை அணிந்த ஒரு போலீஸ்காரர், நடுரோட்டில் வயதான பெண் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரென அவளது கன்னத்தில் அறைந்துக் கொள்வது பதிவாகியுள்ளது. அப்பெண் தெருவோரத்தில் ஏதோ விற்பனை செய்து கொண்டு இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகத்  தெரிகிறது.

அந்த பெண் அறைந்தபிறகு கதறி அழைத்தும், அந்த அதிகாரி இரக்கம் காட்டவில்லை என்பது வீடியோவில் தெளிவாகக் காணப்படுகிறது. தற்போது இந்த அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில்  வேகமாக பரவி வருகிறது. வீடியோ எங்கு, எப்போது படம் பிடிக்கப்பட்டது என்ற தகவல் தற்போது வரை உறுதி செய்யப்படவில்லை.

இந்த வீடியோ குறித்து நெட்டிசன்கள்  பலர் போலீஸ்காரரின் நடத்தை குறித்து கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். “சாதாரண மக்கள் மீது அதிகாரங்களை தவறாக பயன்படுத்தும் போலீஸாருக்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி, கடுமையான சட்ட நடவடிக்கை வலியுறுத்தப்படுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸ் துறை இதற்கான விசாரணையை உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?