கேரளாவில் 11,168 வார்டுகளில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது... ஆர்வமுடன் குவிந்த வாக்காளர்கள்!

 
தேர்தல் வாக்குப்பதிவு கல்லூரி மாணவிகள் வோட்டு

கேரள உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) மாநிலத்தின் தென் மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள ஏழு மாவட்டங்களில் நடைபெறுகிறது. இந்தப் பகுதியில் உள்ள 11,168 வார்டுகளுக்கு வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. 

இன்று  காலை முதற்கட்ட வாக்குப்பதிவு திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் துவங்கியது. 

BREAKING! வாக்குப்பதிவு தொடக்கம்! நீண்ட வரிசையில் திரண்ட வாக்காளர்கள்!

இந்தப் பகுதிகளில் உள்ள மொத்தம் 595 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. இதில்  471 கிராமப் பஞ்சாயத்துகள் (8,310 வார்டுகள்), 75 பிளாக் பஞ்சாயத்துகள் (1,090 வார்டுகள்), 7 மாவட்டப் பஞ்சாயத்துகள் (164 வார்டுகள்), 39 நகராட்சிகள் (1,371 வார்டுகள்), 3 மாநகராட்சிகள் (233 வார்டுகள்) ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.

கேரளாவில் இன்று (டிசம்பர் 9, செவ்வாய்க்கிழமை) தொடங்கிய உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவைத் தொடர்ந்து, அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 13, 2025 அன்று அறிவிக்கப்படும் எனத் மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

கர்நாடகா தேர்தல் வாக்குப்பதிவு பெண்கள் முதல் வாக்காளர்கள் ஓட்டுப்பதிவு

முதல் கட்டத் தேர்தல் (இன்று): திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்கள்.

இரண்டாம் கட்டத் தேர்தல்: எஞ்சிய மாவட்டங்களான திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புறம், கண்ணூர், வயநாடு மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு டிசம்பர் 11-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை: இரு கட்டத் தேர்தல்களுக்குமான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 13-ஆம் தேதி ஒரே நாளில் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!