பொங்கலுக்கான பரிசுத்தொகுப்பு தேதி அறிவிப்பு... நவ.15ம் தேதி முதல் விநியோகம் தொடக்கம்!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு இலவச வேட்டி-சேலை திட்டம் தொடங்கும் தேதியை மாநில அரசு அறிவித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள முருகன் கூட்டுறவு சங்கம் விற்பனை நிலையத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காந்தி, இந்த ஆண்டுக்கான இலவச பொங்கல் வேட்டி, சேலை விநியோகம் வரும் நவம்பர் 15ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.
“திமுக ஆட்சியில் கைத்தறி நெசவாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகள் தரமானவையாக உள்ளன. இதனால் மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. கூட்டுறவு சங்கங்களில் விற்பனை செய்யப்படும் பட்டுப் பொருட்களே உண்மையான பட்டு; அவற்றை நாங்களே உத்திரவாதத்துடன் விற்பனை செய்கிறோம்” என்றார்.

தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளதால், பட்டுச் சேலைகளின் விலை உயர்ந்துள்ளதாகவும், அதனால் புடவைகளில் சேர்க்கப்படும் ஜரிகையில் தங்கம், வெள்ளியின் அளவை குறைப்பது குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், மழையால் நெசவுத் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும், திமுக ஆட்சியில் நெசவாளர்களின் கூலி உயர்த்தப்பட்டு, தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.800 முதல் ரூ.1500 வரை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், “அதிமுக ஆட்சியில் பத்தாண்டுகளில் ஒன்பது ஆண்டுகள் நஷ்டத்தில் இருந்த கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம், தி.மு.க. ஆட்சியின் முதல் ஆண்டிலேயே ரூ.9 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இதுவரை 58 சொசைட்டிகள் நவீனமயமாக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் வளர்ச்சி அடைந்துள்ளது” என்றும் அமைச்சர் காந்தி தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
