பொங்கல் விடுமுறை... தாம்பரம் - திருச்சி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

 
ரயில் முன்பதிவு

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் தற்போது ஜனவரி 14ம் தேதி முதல் பொங்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 13ம் தேதி போகி பண்டியையொட்டி விடுமுறை அறிவிக்கக்கோரி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊர் நோக்கி பலரும் பயணப்பட இருப்பதால் தமிழக அரசு சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ரயில்

நாளை ஜனவரி 4ம் தேதி துவங்கி, 5, 10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்படும் ரயில் (06190) மதியம் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.  அதே போன்று நாளை ஜனவரி 4ம் தேதி துவங்கி 5,10,11,12,13,17,18,19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து நண்பகல் 3.30 மணிக்கு புறப்படும் ரயில் (06191) இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையும்.

ரயில்

இந்த ரயில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு தொடங்கி உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web