இன்றே கடைசி... பொங்கல் சிறப்பு தொகுப்பை வாங்க மிஸ் பண்ணீடாதீங்க!

 
பொங்கல்
 

தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு பொங்கல் பண்டிகையையொட்டி தலா 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு  என பொங்கல் பரிசுத்தொகுப்பாக ரேஷன் கடைகளின் மூலம் விநியோகப்பட்டு வந்தது. இலவச வேட்டி - சேலையும் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட நிலையில், பல இடங்களில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்படவில்லை.

பொங்கல்

இன்னும் சில இடங்களில் கரும்புகள் உடைந்து, தரமில்லாமல் இருந்ததாக புகார்கள் தொடர்ந்து எழுகின்றன. வேட்டி, சேலைகள் இன்னும் வரவில்லை என்று ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்ததால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளானார்கள்.

இன்னும் பலர் பொங்கல் பண்டிகையை உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாட சொந்த ஊருக்கு சென்று விட்டதால் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்காமல் உள்ளனர்.இந்நிலையில் நியாய விலைக் கடடைகளில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வாங்காதவர்கள் வரும் ஜனவரி 25ம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு தேதி நீட்டித்து அறிவித்துள்ளது.

பொங்கல்

இது வரை தமிழகத்தில் 85 சதவீத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீதமுள்ள பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி ஜனவரி 25ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், விடுபட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்று பயன்பெறுமாறு அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web