பொங்கல் ஸ்பெஷல் : பனை ஓலைகள் வெட்டும் பணி தீவிரம்!
தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பராம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட ஆயத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பல வீடுகளில் பொங்கல் பண்டிகையின் போது கேஸ் அடுப்பில் பொங்கல் வைத்து கொண்டாடுவது வழக்கமாகி வரும் நிலையில் தூத்துக்குடியை பொறுத்தவரை இன்றும் பலர் தங்கள் வீடுகளின் முற்றத்தில் மண் அடுப்பு வைத்து மண் பானையில் அரிசியிட்டு, பனை ஓலை எரித்து, பொங்கலிட்டும் பாரம்பரிய முறையை கடைப்பிடித்து வழிபாடு செய்து வருகின்றனா்.
இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் பனை மரங்கள் அதிகம் உள்ள அந்தோணியார்புரம் பகுதியில் பனை மரங்களில் இருந்து பனை ஓலைகளை வெட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பனை மரத்திலிருந்து வெட்டும் பச்சை ஓலைகள் கீழே விழுந்ததும் அதனை எடுத்து குளத்தின் கரைப்பகுதியில் வெயிலில் காய வைக்கின்றனர். ஓரிரு நாட்களில் ஓலைகள் நன்கு காய்ந்ததும் மொத்தமாக வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்பனைக்கு தயாராகி வருகின்றனர்.
இது குறித்து பனை ஓலையை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த பனைத் தொழிலாளி கித்தேரியன் , "கடந்த ஆண்டு இந்தப் பகுதியில் வெள்ள நீர் தேங்கி இருந்ததால் பனை மரத்தில் ஏறி ஓலை வெட்ட கடினமாக இருந்தது. இந்த ஆண்டு தண்ணீர் இல்லை. இருந்தாலும் குறைந்த அளவில் தான் பனைஓலை வெட்ட முடிந்தது. இன்று வெட்டப்பட்ட ஓலைகள் வெயிலில் ஓரிரு நாட்களில் காய்ந்துவிடும். அதன் பிறகு அதனை மிதித்து கட்டி வாகனத்தில் ஏற்றி விற்பனைக்காக எடுத்துச் செல்வார்கள் எனக் கூறியுள்ளார்.
இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!