ஜன.19ம் தேதிதூத்துக்குடி - தாம்பரம் இடையே பொங்கல் சிறப்பு ரயில் அறிவிப்பு!

ஜனவரி 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பொங்கலை முன்னிட்டு தொடர் விடுமுறை தினங்களுக்காக சொந்த ஊருக்கு சென்றிருப்பவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் ரயில் நிலையம் வரையில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயில் வண்டி எண்.06168, தூத்துக்குடியில் இருந்து ஜனவரி 19ம் தேதி மாலை 4-25 மணிக்கு புறப்படும். மறுநாள் அதிகாலை 3-45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வந்து சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தூத்துக்குடி மேலூர், வாஞ்சி மணியாச்சி, கடம்பூர், கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், திருமங்கலம், மதுரை, சோழவந்தான், திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், அரியலூர், விருதாச்சலம், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதற்கான முன்பதிவு இன்று துவங்கி உள்ளது.
பொங்கலை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கிய தெற்கு ரயில்வே நிர்வாகத்திற்கு தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!