மீண்டும் திமுக துணை பொதுச்செயலாளராக பொன்முடிக்கு பொறுப்பு... ஸ்டாலின் அறிவிப்பு!

 
பொன்முடி

தி.மு.க.வில் அண்மைக் காலமாக ஓரங்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் முக்கிய பொறுப்புக்கு வரவேற்கப்பட்டுள்ளார். கட்சியின் துணை பொதுச்செயலாளராக அவரை மறுபடியும் நியமிக்க முதல்வரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நியமனம் மூலம், பொன்முடியின் அரசியல் நிலைப்பாடு குறித்து எழுந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கட்சி நிர்வாகம் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொன்முடி

அதேநேரம், அமைச்சர் மு.பெ. சாமிநாதனும் துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் திமுகவில் துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் தேர்வு:  மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி

மு.பெ. சாமிநாதன் துணை பொதுச்செயலாளராக உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டவர்களுக்கு கட்சியினரிடையே வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நியமனங்கள் தி.மு.க. அமைப்புச் செயல்பாடுகளில் புதிய ஆற்றலை உருவாக்கும் என கட்சி வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?