பிரபல பாப் பாடகருக்கு மரண தண்டனை.. ஈரான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

 
அமீர் ஹொசைன் மக்சூத்

அமீர் ஹொசைன் மக்சூத் (37) ஒரு பிரபல ஈரானிய பாப் பாடகர். அவர் பொதுவாக 'டாட்டலூ' என்று அழைக்கப்படுகிறார், உடல் முழுவதும் பச்சை குத்தியுள்ளார். ஈரானின் இளைய தலைமுறையினரின் அரசியல் மற்றும் சமூக அம்சங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியதற்காக அவர் அடிக்கடி சர்ச்சைக்குரியவராக இருந்து வருகிறார். இந்த வழக்கில், நபிகள் நாயகத்தை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

விபச்சாரத்தை ஊக்குவிப்பது மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளில் தேடப்படும் பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லூ, 2018 முதல் துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்தார். பின்னர், துருக்கிய போலீசார் அவரை டிசம்பர் 2023 இல் ஈரானுக்கு நாடு கடத்தினர். அதன் பின்னர் அவர் ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படுகிறது. தெய்வ நிந்தனை வழக்கில், பாடகர் அமீர் ஹொசைன் மக்சூத்லூ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. விசாரணையின் போது, ​​பாடகருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அரசாங்கம் வாதிட்டது. இந்த வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு மரண தண்டனை விதித்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும் மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க

From around the web