பிரபல பாலிவுட் நடிகர் சதீஷ் ஷா காலமானார்!
பாலிவுட் உலகில் தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் சதீஷ் ஷா (71) மறைந்தார். சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர், கடந்த சில நாட்களாக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று உயிரிழந்ததாக மருத்துவமனைவழி உறுதிப்படுத்தப்பட்டது.

சதீஷ் ஷாவின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுவதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுச் செய்தி பாலிவுட் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
1952 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த சதீஷ் ஷா, 1978 ஆம் ஆண்டு “அரவிந்த் தேசா கி ஆஜிப் தஸ்தான்” என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர், நகைச்சுவை மற்றும் குணசித்திர வேடங்களில் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார். தொலைக்காட்சி தொடர்களிலும் பல முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த அவர், இன்று வரை ரசிகர்களால் மறக்க முடியாத நட்சத்திரமாக உள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
