பிரபல பாடகர் அய்யப்பதாஸ் சாலை விபத்தில் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!
Jan 6, 2025, 12:40 IST
சாலை விபத்தில் பிரபல பாடகர் அய்யப்பதாஸ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு விட்டு திரும்பியபோது நடந்த சாலை விபத்தில் பாடகர் ஏ.கே.அய்யப்பதாஸ் (45) பரிதாபமாக உயிரிழந்தார்.
கோட்டயம்-எர்ணாகுளம் சாலையில் கனகரி சந்திப்பு அருகே இரவு 11:30 மணியளவில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நடந்துள்ளது. அய்யப்பதாஸ் கடுத்துருத்தியில் இசை நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு விட்டு பைக்கில் திரும்பிக் கொண்டிருந்த போது இவரது பைக்கின் மீது மற்றொரு இருசக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த பாடகர் அய்யப்பதாஸை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
கோட்டயம் ஸ்டார் வாய்ஸ் இசைக்குழுவில் பாடகராக இருந்து வந்த அய்யப்பதாஸ் கடந்த 25 ஆண்டுகளாக கேரளா முழுவதும் பல இசைக்குழுக்களுடன் பணியாற்றியுள்ளார். அவருக்கு பிரதிபா என்கிற மனைவியும் ஹரிஹர்தாஸ், மாதவதாஸ் என்று இரு மகன்களும் உள்ளனர்.
From
around the
web