வானூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... 14 பேர் பலி... 200க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
பசிபிக் பெருங்கடலில் வானுவூட்டு தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்க 7.4 ரிக்டராக பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தில் சேதம் ஏற்பட்டது. மேலும், சில கட்டடங்கள் இடிந்து விழுந்தன.
— Dina Maalai (@DinaMaalai) December 18, 2024
இதனைத் தொடர்ந்து, நியூசிலாந்து உட்பட சில நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில், போர்ட் விலாவில் உள்ள மீட்புப் படையினர் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நிலநடுக்கத்தால் பல இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 14 பேர் உயிரிழந்துள்ளனர்,
200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று டிசம்பர் 18ம் தேதி புதன்கிழமை அதிகாலை 5.5 ரிக்டர் அளவில் அதிர்வு கொண்ட நிலநடுக்கம் தாக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் வனுவாட்டு தீவுகளில் பதட்டமான நிலை நீடித்து வருகிறது.
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!