ஜி.வி. பிரகாஷ் மகளுடன் தீபாவளி கொண்டாட்டம்... சைந்தவி ரியாக்ஷன் வைரல்!
தனது மனைவி சைந்தவியை விவாகரத்து செய்து பிரிந்த இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ், தனது மகள் அன்வியுடன் பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த ஆண்டு தீபாவளி திருநாளை சினிமா பிரபலங்கள் உற்சாகமாகக் கொண்டாடிய நிலையில், ஜி.வி. பிரகாஷ் வெளியிட்ட இந்த வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
சமீபத்தில் தனுஷ் நடித்த வாத்தி படத்துக்காக தேசிய விருது பெற்றிருந்த ஜி.வி. பிரகாஷ், மகளுடன் காரின் அருகே நின்று பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோவில் அப்பா-மகள் பாசம் பொங்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அந்த வீடியோவில் அன்வி காதை பொத்திக் கொண்டே மகிழ்ச்சியாக சிரிப்பது ரசிகர்களின் இதயத்தை கவர்ந்துள்ளது.
விவாகரத்து செய்த பிறகும் நல்ல நட்புடன் இருப்பதாக கூறப்படும் ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி, ஒருவரின் பதிவுகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். ஜி.வி. பிரகாஷ் பகிர்ந்த வீடியோவுக்கு சைந்தவியும் லைக் செய்துள்ளார். இதனால், “இருவரும் மீண்டும் ஒன்றாவார்களா?” என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
