சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கிய பிரசாந்த் கிஷோர் திடீர் கைது!

 
பிரசாந்த் கிஷோர்

 அரசு பணியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாக கூறி பாட்னாவில் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கிய அரசியல் விமர்சகரும், ஜன் சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோரை போலீசார் கைது செய்துள்ளனர். 

பீகார் அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து ஜன் சுராஜ் கட்சியின் நிறுவனர் பிரசாந்த் கிஷோர் பாட்னா, காந்தி மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். 

பிரசாந்த் கிஷோர்

இந்நிலையில் உண்ணாவிரத போராட்டம் தொடர்பாக பிரசாந்த் கிஷோர் மற்றும் அவரது ஆதர்வாளர்கள் 150 பேர் மீது போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்யது, இந்த போராட்டம் சட்ட விரோதம் தெரிவித்து பிரசாந்த் கிஷோரைக் கைதுச் செய்துள்ளனர். 

இன்று 5வது நாள் போராட்டம் தொடர்ந்த நிலையில், இன்று காலை பாட்னா போலீசார் பிரசாந்த் கிஷோரை வலுக்கட்டாயமாக கைது செய்து, ஆம்புலன்சில் ஏற்றி, எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web