நாசரேத் திருமறையூர் மறுரூப ஆலயத்தில் தோத்திர திருவிழா!
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் உள்ள திருமறையூர் மறுரூப ஆலயத்தில் அறுப்புக்கால தோத்திரப் பண்டிகை சிறப்பு ஆராதனை நடந்தது.
ஆராதனைக்கு தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல சுற்றுச் சூழல் கரிசனைத் துறையின் இயக்குநர் மற்றும் திருமறையூர் சேகர தலைவருமாகிய குருவானவர் ஜான் சாமுவேல் தலைமை வகித்தார். பாட்டக்கரை சேகர தலைவர் ஜெபஸ் ரஞ்சித் தேவசெய்தி அளித்தார். ஆராதனையில் சபை மக்கள் காணிக்கையாக தங்கள் தோட்டத்தில் விளைந்த காய்கறிகள், பழங்கள் மற்றும் வீடுகளில் செய்த பலகாரங்கள் ஆகியவற்றை படைத்தனர்.
பின்னர் காணிக்கையாக படைத்த பொருட்கள் ஏலம் விடப்பட்டது. இந்த பண்டிகையில் பிரதானமாக சேகரத் தலைவர் ஜான் சாமுவேல் 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்த குடும்பத்தினரிடம் ஆசீர்வாத தட்டை வழங்கினார்.
ஆராதனையில் சபை ஊழியர் ஜான்சன் ஸ்டான்லிதுரை, ஆலய பணியாளர் ஆபிரகாம், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஜெயபால், தேவதாஸ், சேகர செயலர் ஜான்சேகர், பொருளாளர் அகஸ்டின், பாடகர் குழு தலைவர் ஜோயல், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சேகர தலைவர் ஜான்சாமுவேல் மற்றும் சபை மக்கள் செய்திருந்தனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!