பகீர்... லீவு முடிஞ்சு விடுதிக்கு போகும் போது மாணவிகளுக்கு கர்ப்ப சோதனை கட்டாயம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அரசுப் பழங்குடியினர் விடுதியில் படிக்கும் மாணவிகள், விடுதி நிர்வாகத்தின் மீது பரபரப்புக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். விடுமுறையிலிருந்து திரும்பும் மாணவிகளை, விடுதிக்குள் அனுமதிக்கும் முன் கட்டாயமாக கர்ப்ப பரிசோதனை செய்ய வற்புறுத்துவதாகவும், அதை மறுத்தால் நுழைவுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த நடைமுறை தங்களை அவமானப்படுத்துவதாக மாணவிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

கர்ப்ப பரிசோதனை கருவியை மாணவிகளே வாங்கி அரசு மருத்துவமனைக்குச் சென்று, ‘எதிர்மறை’ சான்றிதழ் பெற்றுவந்து சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகம் வற்புறுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் ஆகாத நிலையிலும் சந்தேகக் கண்ணுடன் பார்க்கப்படுவதால் மன உளைச்சல் ஏற்படுகிறது என மாணவிகள் கூறுகின்றனர். இதே போன்ற புகார்கள், பழங்குடியினர் மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஆசிரமப் பள்ளிகளிலும் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகள், இந்தப் பரிசோதனைக்காகத் தங்களே செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஏற்கனவே கடந்த ஆண்டு இதுபோன்ற விவகாரத்தில் மாநில மகளிர் ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இந்த நடைமுறை மீண்டும் தொடர்வது கடும் கண்டனத்தை எழுப்பியுள்ளது. இத்தகைய விதிமுறைகள் எதுவும் இல்லை என்றும், விடுதிகளில் இவ்வாறான பரிசோதனைகள் நடத்தக் கூடாது என்றும் பழங்குடியினர் மேம்பாட்டுத் துறை விளக்கம் அளித்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
