முன்விரோதம்.. கூலித்தொழிலாளியை கொடூரமாக குத்திக் கொன்ற சிறுவர்கள்!
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அருகே உள்ள காப்பிளி பட்டியைச் சேர்ந்த காளீஸ்வரன் (24). இவர் மரம் வெட்டும் தொழிலாளி. செவ்வாய்க்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் புகுந்த 3 சிறுவர்கள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே வெளியே சென்ற காளீஸ்வரனின் மனைவி வீடு திரும்பியபோது கணவர் கொலை செய்யப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசார் விசாரணை நடத்தினர்.
மோப்ப நாய் ஒன்றும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அப்பகுதியை சேர்ந்த சில சிறுவர்களை பெண்கள் முன்னிலையில் தகாத வார்த்தைகளால் பேசியதாக காளீஸ்வரன் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் காளீஸ்வரனை கொன்றிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இன்று மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!