வேளாண் சட்ட ரத்து மசோதவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

 
வேளாண் சட்ட ரத்து மசோதவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதவுக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளித்துவிட்ட நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்தார்.

வேளாண் சட்ட ரத்து மசோதவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஒன்றிய அரசு கடந்த ஆண்டு புதிய வேளாண் சட்டங்களை திருத்தத்துடன் கொண்டு வந்தது. அந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நாடு தழுவிய அளவில் விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து சட்டங்களை திரும்ப பெறுவதாக இந்திய பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

வேளாண் சட்ட ரத்து மசோதவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

இந்நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இரு அவைகளும் ஒப்புதல் அளித்த நிலையில் நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேறியது. இருப்பினும் அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்த பின்பு தான் சட்ட வடிவமாகும். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு மசோதா அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் இன்று அவர் ஒப்புதல் அளித்தார். இதன்மூலம் 3 புதிய வேளாண் சட்டங்களும் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

From around the web