பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் பேட் பரிசு.. கெளரவித்த வெஸ் இண்டீஸ் வீரர்கள்!

 
கயானா மோடி

பிரதமர் நரேந்திர மோடி தனது 3வது கட்ட பயணமாக கயானா சென்றார். தலைநகர் ஜார்ஜ் டவுனுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கயானா அதிபர் முகமது இர்பான் அலியை பிரதமர் மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். கயானா தலைநகர் ஜார்ஜ் டவுனில் உள்ள ப்ரோமனேட் பூங்காவில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து அங்குள்ள சரஸ்வதி வித்யா நிகேதன் பள்ளிக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு மாணவர்கள் வந்தே மாதரம் மற்றும் தேசபக்தி பாடல்கள் பாடி பிரதமர் மோடியை வரவேற்றனர். இந்நிலையில், கயானாவில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்களை அதிபர் முகமது இர்பான் அலியும், பிரதமர் மோடியும் சந்தித்து பேசினர். பிரதமர் மோடிக்கு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் மட்டையை பரிசாக வழங்கினர். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் இரு நாடுகளையும் ஒன்றிணைத்துள்ளது என்றார்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்..!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web