உலகக் கோப்பை வெற்றிக்கு பிரதமர் மோடி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
மகளிர் உலகக் கோப்பையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
மும்பையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலகக் கோப்பையை முதல்முறையாக கைப்பற்றிய இந்திய மகளிர் அணிக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்துள்ளன.

பிரதமர் மோடி தனது எக்ஸ் (X) பக்கத்தில் பதிவிட்ட வாழ்த்து செய்தியில், “உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்! இறுதிப்போட்டியில் வீராங்கனைகள் வெளிப்படுத்திய தன்னம்பிக்கை, திறமை, ஒற்றுமை ஆகியவை பெருமை தருகின்றன. முழு தொடரிலும் இந்திய வீராங்கனைகள் காட்டிய குழுவுணர்வு அனைவருக்கும் ஊக்கமளிப்பதாகும். இந்த வெற்றி எதிர்கால பெண் வீராங்கனைகளுக்கே ஒரு முன்மாதிரியாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது வாழ்த்து செய்தியில், “அடுத்த தலைமுறையினரை ஊக்குவிக்கும் வரலாற்று வெற்றியை இந்திய மகளிர் அணி பெற்றுள்ளது. ஒருமித்த முயற்சியின் விளைவாக உலகக் கோப்பை இந்திய கையில் வந்துள்ளது. பெண்களின் திறமை, துணிவு, உறுதியை வெளிப்படுத்திய அற்புத சாதனை இது” என்று தெரிவித்தார்.

மேலும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் விளையாட்டு பிரபலங்களும் இந்திய மகளிர் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
