தனியார் நிறுவன ஊழியர் மர்ம மரணம்.. போலீசார் தீவிர விசாரணை!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காட்டுப்பாக்கம் அருகே ஏரிக்கரை அருகே சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக உத்தரமேரூர் போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அப்போது, காவல் ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் உத்திரமேரூர் அடுத்த பஜனை கோவில் தெருவைச் சேர்ந்த சுள்ளி என்பவரின் மகன் முருகன் (34) என்பதும், அவர் திருவண்ணாமலை மாவட்டம், மாங்கல் கூடரோட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்ப்பதும் தெரியவந்தது. போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
நில விற்பனை தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த முருகனுக்கும் விஜயனுக்கும் முன்விரோதம் இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் விஜயனின் குடும்பத்தினர் தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் உத்தரமேரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
செல்வம் கொழிக்க செய்யும் புரட்டாசி வெள்ளிக்கிழமை விரதமுறை, வழிபாடு, பலன்கள்!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? விஞ்ஞான விளக்கம் இதோ!