தனியார் பள்ளி காவலாளி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!
சென்னை எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி (பெயர் மாற்றப்பட்டது), தனது பாட்டி வீட்டில் தங்கி, இளங்கலை 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 9ம் தேதி, வீட்டின் பின்புறத்தில் துணி துவைக்கும் போது, மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் நுழைந்தார். மாணவி “யார் நீங்கள்?” என கேட்ட போது, அந்த நபர் “கேபிள் டிவி வயர் மாற்ற வந்தேன்” என்று கூறினார். இதையடுத்து மாணவி துணி துவைக்கத் தொடங்கினாள்.

அப்போது அந்த நபர் மாணவியின் பின்புறம் வந்து கட்டிப்பிடித்து, பாலியல் தொந்தரவு செய்தார். உதவி கோரிய மாணவி கூச்சலிடும்போது, அந்த நபர் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து மாணவி எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

விசாரணை மேற்கொண்ட போலீசார், அகிலன் தெருவைச் சேர்ந்த 44 வயது கணேஷ் என்பவரை அடையாளம் கண்டனர். இவர், கே.கே.நகரில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தவராக இருந்தார். போலீசார் கணேஷ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
