புரோ கபடி இறுதிப்போட்டி.. இன்று டெல்லி – புனே பலப்பரீட்சை!

 
புரோ கபடி

புரோ கபடி லீக் 12வது சீசனின் இறுதிப் போட்டி இன்று தபாங் டெல்லி மற்றும் புனேரி பல்தான் அணிகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

டெல்லி தியாகராஜா ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கும் இந்த மோதல், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் மூலம் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.

புரோ கபடி

முன்னதாக, 8வது சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற தபாங் டெல்லி அணி, இந்த சீசனின் லீக் சுற்றில் 2வது இடத்தை பிடித்தது. குவாலிபையர் 1 போட்டியில் புனேரி பல்தான் அணியை எதிர்கொண்டு 34-34 என சமனில் முடித்திருந்தது. பின்னர் நடந்த டை-பிரேக்கரில் 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. கேப்டன் அஷு மாலிக் தலைமையில் டெல்லி அணி பல நெருக்கடியான தருணங்களில் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது.

மற்றொரு பக்கம், கேப்டன் அஸ்லம் இனாம்தார் மற்றும் பயிற்சியாளர் அஜய் தாக்கூர் தலைமையிலான புனேரி பல்தான் அணி, இந்த சீசனில் லீக் சுற்றை முதலிடத்தில் முடித்தது. குவாலிபையர் 1-ல் தோல்வி அடைந்த பின்பும், குவாலிபையர் 2-ல் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை தோற்கடித்து இறுதிக்குத் தகுதி பெற்றது.

புரோ கபடி போட்டி

இரு அணிகளும் இச்சீசனில் மூன்று முறை மோதியுள்ளன. ஒவ்வொரு மோதலும் டை பிரேக்கரில் முடிவடைந்துள்ளது. தபாங் டெல்லி அணியின் ரெய்டிங் பளிச்சென இருந்த நிலையில், புனேரி பல்தான் அணியின் தடுப்பு ஆட்டம் மிகுந்த நிதானத்துடன் செயல்பட்டது.

இறுதியாக, தபாங் டெல்லி சொந்த மண்ணில் விளையாடும் நிலையில், ஃபசல் அட்ராச்சாலி, சவுரப் நந்தல் மற்றும் அஷு மாலிக் ஆகியோரின் ஆட்டமே இன்றைய வெற்றிக்கான முக்கியக் காரணி என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?