தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

 
தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!


உலகபிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்று திருச்செந்தூர் .முருகனின் அறுபடை வீடுகளில் 2வது தலம் இது. இங்கு ஒவ்வொரு வருடமும் கந்த சஷ்டி விழா மிக விமரிசையாக நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் கந்தசஷ்டி திருவிழா நவம்பர் 4ல் தொடங்கி 15 வரை நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

இந்த கந்தசஷ்டி திருவிழாவை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவர். கொரோனா காரணமாக இந்த விழாவை காண பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதே நடைமுறையே இந்த ஆண்டும் தொடரும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கந்த சஷ்டி திருவிழா முன்னேற்பாடுகள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி நவம்பர் 9 ல் நடைபெறும் சூரசம்ஹாரம் மற்றும் 10ல் நடைபெறும் திருக்கல்யாண நிகழ்வுகளில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி கிடையாது.

தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

மற்ற நாட்களில் பத்தாயிரம் நபர்கள் வரை கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாட்களில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், இந்த நிகழ்வுகளில் தனிநபர் அன்னதானத்திற்கும், கோவில் சுற்று வட்டாரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடரும் தடை உத்தரவு! பக்தர்கள் அதிருப்தி!!

இந்த திருவிழாக் காலங்களில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனவும், சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணம் ஆகிய நிகழ்வுகளை உள்ளூர் தொலைக்காட்சி மற்றம் யூடியூப் சேனல்கள் மூலமாக கண்டுகளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

From around the web