இன்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம்... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு!

 
மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சண்முகம்
இன்று பிப்ரவரி 4ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய பாஜ அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சிபிஎம் தெரிவித்துள்ளது.

நிர்மலா சீதாராமன்

இது குறித்து மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் – விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை ஏற்றியுள்ள ஒன்றிய அரசின் நாசகார பட்ஜெட்டை எதிர்த்தும், அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக எதேச்சதிகரமாக செயல்படும் ஒன்றிய பாஜ அரசினை கண்டித்தும் இன்று பிப்ரவரி 4ம் தேதி தமிழகம் முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்டு அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.

நிர்மலா சீதாராமன்

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகளும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web