நாளை தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம்... போக்குவரத்து ஓய்வூதியர்கள் அறிவிப்பு!

 
இன்று முதல் 23 மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்து துவக்கம்!

நாளை தமிழகம் தழுவிய அளவில் போக்குவரத்து ஓய்வூதியர்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக ஓய்வுபெற்றோர் நலஅமைப்பின் பொதுச்செயலாளர் கே.கர்சன் பேசுகையில், ''போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் பிரச்சினை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. ஓய்வூதியர்களுக்கு 106 மாதங்களாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும், மேல்முறையீடு செய்து அரசு காலம் தாழ்த்துகிறது. கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்கப்படவில்லை. மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை.

ஊதிய உயர்வு கேட்டு போக்குவரத்து ஊழியர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

இது தொடர்பானவற்றுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி, ஆக.16ம் தேதி முதல் இன்று வரை வீடுதோறும் தொழிலாளர்களிடமும், பொதுமக்களிடமும் துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்தோம்.

போக்குவரத்து

இதன் தொடர்ச்சியாக ஆக.27-ம் தேதி தமிழகம் தழுவிய அளவில் 9 இடங்களில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். இதன் பகுதியாக சென்னை, பல்லவன் இல்லம் அருகே மறியல் போராட்டம் நடைபெறும்'' என்றார். 

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web