பப்ஜி கேம் அடிமைத்தனம்.. ரயில் தண்டவாளத்தில் உயிரை விட்ட மூன்று இளைஞர்கள்!

 
பீகார் இளைஞர்கள்

பீகார் மாநிலம் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நேற்று (ஜனவரி 02) மொபைல் போன்களில் PUBG விளையாடிக் கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர். முஃபாசி காவல் நிலையத்திற்குட்பட்ட நர்கதியாகஞ்ச்-முசாபர்பூர் ரயில் பாதையில் மான்சா டோலாவில் உள்ள ராயல் பள்ளி அருகே விபத்து ஏற்பட்டது.

அவர்கள் ரயில் பாதையில் இருந்து கேம் விளையாடியதாலும், இயர்போன் அணிந்திருந்ததாலும், ரயில் வருவதை கவனிக்கத் தவறியதாலும் இந்த விபத்து நேர்ந்ததாக போலீஸார் தெரிவித்தனர். விசாரணையில், பலியானவர்கள் ரயில்வே கும்டியைச் சேர்ந்த ஃபுர்கான் ஆலம், சமீர் ஆலம் மற்றும் ஹபிபுல்லா அன்சாரி என போலீசார் அடையாளம் கண்டனர். முதற்கட்ட விசாரணையில் அவர்கள் செல்போனில் PUBG கேம் விளையாடியது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, பாதுகாப்பற்ற சூழலில் குறிப்பாக ரயில் தண்டவாளங்களில் மொபைல் கேம் விளையாடுவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து காவல் துறை அதிகாரி ஒருவர் பேசினார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் கேமிங் பழக்கத்தை கண்காணிப்பதன் அவசியத்தையும், எதிர்காலத்தில் இதுபோன்ற அவலங்கள் ஏற்படாமல் இருக்க பொது இடங்களில் விழிப்புடன் இருக்க வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் வலியுறுத்தினர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web