மன்மோகன் மறைவு... கர்நாடகாவில் பொதுவிடுமுறை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் இன்று டிசம்பர் 27ம் தேதி வெள்ளிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது அரசு அலுவலகங்கள், பள்ளி-கல்லூரிகள் உட்பட அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இன்று கர்நாடகத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இன்று முதல் 7 நாட்கள் கர்நாடகத்தில் துக்கம் அனுசரிக்கப்படும் என துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். இதனால் அரசு அலுவலகங்களில் தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது மேலும் காங்கிரஸ் அலுவலகங்களிலும் அக்கட்சியின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்றது
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!