கோவையில் பொதுமக்கள் போராட்டம்! கோவிலை இடிக்க எதிர்ப்பு!

 
கோவையில் பொதுமக்கள் போராட்டம்! கோவிலை இடிக்க எதிர்ப்பு!

கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ளது முத்தண்ணன் குளத்தில் உள்ளது பழமையான மாரியம்மன் கோவில் . தற்போது கோவை மாநகரம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் பொருட்டு குளக்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 2000 வீடுகள் இடிக்கப்பட்டு இங்கு வசித்து வந்தவர்களுக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப் பட்டன. அந்த இடத்தில் நடை பாதை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

கோவையில் பொதுமக்கள் போராட்டம்! கோவிலை இடிக்க எதிர்ப்பு!


இந்நிலையில் இங்கு சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மாரியம்மன் கோவிலை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். இதற்கு அந்த பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கோவிலை இடிக்கப்போவதாக தகவல் பரவியதையடுத்து பொதுமக்கள் கோவில் முன்பு திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் ஒன்று கூடி கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கோவில் இடிக்கப்படுவது பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

From around the web