கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து!! ஸ்டாலின் அதிரடி!!

 
கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து!! ஸ்டாலின் அதிரடி!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அடுத்தடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் தற்போது அமலில் இருக்கும் ஊரடங்கை டிசம்பர் 15 வரை நீட்டித்து ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து!! ஸ்டாலின் அதிரடி!!

அதில்
கொரோனா தடுப்பு நடவடிக்கை, தொடர் கனமழை , பொதுமக்கள் நலன் இவற்றின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15 வரை நீட்டிக்கப்படும். அதே நேரத்தில் கேரளாவிற்கு பொதுப்போக்குவரத்திற்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்
கடைகளில் சானிடைசர், உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்ய வேண்டும்
கடைகளில் பணிபுரிபவர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயம்.


கடைகளில், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப் படுவதை கடை உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்.
நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி
நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்படும்.

கேரளாவுக்கு பொதுப் போக்குவரத்து!! ஸ்டாலின் அதிரடி!!


பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்.
தடுப்பூசி செலுத்திக் கொள்தல் அவசியம். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

From around the web