#Breaking: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

 
#Breaking: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

#Breaking: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

புதுச்சேரியில் 1 – 8 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த நவம்பர் 8 ஆம் தேதியில் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கனமழை மற்றும் வெள்ளப்பாதிப்புகள் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 20 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று, டிசம்பர் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அம்மாநில கல்வி அமைச்சர் முன்னர் தெரிவித்திருந்தார். அதற்காக பள்ளிகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டிருந்தது.

#Breaking: 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு!

அதன்படி, ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதை தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு வருகை பதிவேடு கிடையாது. மாணவர்களுக்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெறிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து புதுச்சேரியில் பள்ளிகள் இன்று முதல் திறக்கப்பட்டு செயல்பட உள்ளன.

From around the web