விஜய்யின் பேச்சை டீக்கடையில் அமர்ந்து செல்போனில் கேட்டு ரசித்த புதுச்சேரி முதல்வர்!
தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் இன்று நடத்திய பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், புதுச்சேரி அரசு வழங்கிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு நன்றி தெரிவித்து முதல்வரைப் பாராட்டிய நிலையில், இந்தப் பேச்சை முதல்வர் ரங்கசாமி ஒரு டீக்கடையில் அமர்ந்து செல்போனில் ரசித்துக் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் புதுச்சேரியில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய விஜய், தமிழகம் மற்றும் புதுச்சேரி மக்களிடையே ஒற்றுமையை வலியுறுத்தினார். "தமிழக அரசு போல் புதுச்சேரி அரசு கிடையாது. நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளனர். புதுச்சேரி முதல்-மந்திரிக்கு நன்றி. இதைப் பார்த்து தமிழக முதல்-அமைச்சர் கற்றுக்கொள்ள வேண்டும். வரும் தேர்தலில் 100 சதவீதம் கற்றுக்கொள்வார்கள். அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்."
கூட்டணியில் இருந்தாலும் மத்திய அரசு புதுச்சேரியைக் கண்டுகொள்ளவில்லை. மாநிலமாக மாற்றத் தீர்மானம் அனுப்பியும் கண்டுகொள்ளவில்லை. மூடிய மில்களைத் திறக்கவில்லை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவில்லை. புதுச்சேரி மக்களிடம் சொல்கிறேன். தி.மு.க.வை நம்பாதீங்க. நம்பவைத்து ஏமாற்றுவார்கள்.
மாநில அந்தஸ்து மட்டும் போதாது, தொழில் வளர்ச்சியும் வேண்டும். இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். இங்கு ரேஷன் கடைகளைத் தொடங்கி மானிய விலையில் பொருள்களை வழங்க வேண்டும். காரைக்கால் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும். புதுச்சேரி - கடலூர் மார்க்கத்தில் இரயில் திட்டம் வேண்டும்.

விஜய் பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது, புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, ஆரோவில் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சாதாரணமாக அமர்ந்துகொண்டு, தனது செல்போனில் விஜய்யின் பேச்சைக் கேட்டு ரசித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
