முடங்கியது பஞ்சாப்... இன்று விவசாயிகள் பந்த்... பால், காய்கறிகள், சாலை, ரயில் போக்குவரத்து பாதிப்பு!
இன்று டிசம்பர் 30ம் தேதி விவசாயிகள் பஞ்சாப் மாநிலம் முழுவதும் பந்த் கடைப்பிடித்து வரும் நிலையில் இன்று மாலை 4 மணி வரை பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படவில்லை. பஞ்சாப் மாநிலம் முழுவதுமாக சாலை மற்றும் ரயில் போக்குவரத்தும் தடைபட்டன.
பஞ்சாப் மாநில விவசாயிகள் இன்று டிசம்பர் 30ம் தேதி மாநிலம் தழுவிய பந்த்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை சாலை மற்றும் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. வந்தே பாரத் உட்பட 163 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று மாலை போராட்டம் முடியும் வரை பால், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்பட அத்தியாவசிய தேவைகளுக்கான கடைகளும் திறக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு வர்த்தக அமைப்புகள் இந்த பந்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளன.
அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மற்றும் திருமண வாகனங்கள், அவசரமாக செல்லும் வாகனங்கள் மட்டுமே கடந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும்" என்று மூத்த விவசாய சங்க தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய இரு கட்சிகளும் இணைந்து பஞ்சாப் பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளின் தலைவர் ஜக்ஜித் சிங் தலேவால் தொடர்ந்து 35வது நாளாக கானௌரி கிசான் மோர்ச்சாவில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்த போதும் இந்த பந்த் கடைப்பிடிக்கப்படுகிறது. பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரகாரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
சபரிமலை போறீங்களா?! 60 நாட்களுக்கு உணவு, தங்குமிடம் எல்லாமே இங்கே ஃப்ரீ தான்!!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!