44 கோடி டோஸ் தடுப்பூசிகள் கொள்முதல்! மத்திய அரசு !

 
44 கோடி டோஸ் தடுப்பூசிகள் கொள்முதல்! மத்திய அரசு !


இந்தியாவில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. அதே நேரம் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஜூன் 21 முதல் மத்திய அரசே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவதாக தெரிவித்துள்ளது. இதற்கு பல்வேறு மாநில முதல்வர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

44 கோடி டோஸ் தடுப்பூசிகள் கொள்முதல்! மத்திய அரசு !


இந்நிலையில், தடுப்பூசி கொள்முதல் குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் விடுத்த செய்திக்குறிப்பில் 2021 டிசம்பர் மாதத்திற்குள் 44 கோடி டோஸ் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. இதில், கோவிஷீல்டு தடுப்பூசிகள் 25 கோடி டோஸ்களும், கோவாக்சின் தடுப்பூசிகள் 19 கோடி டோஸ்களும் அடங்கும். செப்டம்பர் மாதத்தில் பயாலாஜிகல்-இ நிறுவன தடுப்பூசிகள் 30 கோடி டோஸ்களும் வாங்கவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

From around the web