பேட்மிண்டன் உலக சாம்பியன்: இறுதி போட்டியில் சிந்து!!

 
பேட்மிண்டன் உலக சாம்பியன்: இறுதி போட்டியில் சிந்து!!

உலக இறுதி சுற்று பேட்மிண்டன் தொடரில் இறுதிப் போட்டிக்கு பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். இறுதி போட்டியில் அவர் தென் கொரிய வீராங்கனை அன் சி யாங்கை எதிர்த்து களமிறங்குகிறார்.

பேட்மிண்டன் உலக சாம்பியன்: இறுதி போட்டியில் சிந்து!!

இந்தோனிசியாவின் பாலி நகரில் உலக இறுதி சுற்று பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் உலக தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்தவர்கள் மட்டுமே விளையாட முடியும். இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து விளையாடி வருகிறார்.

முதல் இரண்டு லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதிக்கு சிந்து தேர்வானார். அரையிறுதியில் ஜப்பான் நாட்டின் அகானே யமாகுச்சிக்கும், சிந்துவுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் 21-15, 15-21, 21-19 என்ற செட் கணக்கில் சிந்து போட்டியை வென்றார். இதன் மூலம் அவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

பேட்மிண்டன் உலக சாம்பியன்: இறுதி போட்டியில் சிந்து!!

இதனையடுத்து நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, தென் கொரியாவின் அன் சி யங்கை எதிர்த்து விளையாடவுள்ளார். பி.வி.சிந்து ஏற்கனவே 2018 ஆம் ஆண்டில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றுளார். அதேபோல் இம்முறையும் உலக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைப்பாரா என இந்திய ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

From around the web