31 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை!

 
மழை

 வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெங்கால் புயலாக மாறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் சென்னை இலங்கையை நோக்கி நகர்ந்து வந்துக் கொண்டிருக்கும் சூழலில் தமிழகத்தில் தொடர்ந்து 4 முதல் 5 நாட்களுக்கு  மழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.  அதே போல, டெல்டா மாவட்டம் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை இருக்கலாம் என கணித்துள்ளனர்.

மழை

அதே போல இன்று மாலை 4 மணி வரை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி மற்றும் புதுச்சேரி, காரைக்கால்   மாவட்டங்களில் மிதமானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை


அதே போல, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் என மொத்தம் 31 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக  வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!

From around the web