வெறும் 6 அடி தூரம் மட்டும் பெய்த மழை... வைரல் வீடியோ!

 
மழை

 இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக மழை கொட்டித் தீர்த்து வருகின்றன. அந்த வகையில் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் முரட் நகரில் போஸ்ட் ஆஃபிஸ் லைன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை திடீரென மழை பெய்தது. ஆனால் அந்த மழை வித்தியாசமாக பெய்ததாக மக்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர். ஏனெனில் இந்த திடீர் மழையானது  சினிமாவுக்காக மழைக்காட்சி செட்டப் செய்தது போல் வெறும் 6 மீட்டர் விட்டம் அளவுக்கே மழை பெய்தது.


 
வித்தியாசமான இந்த நிகழ்வை பொதுமக்கள் 6 அடிக்கு அப்புறமும், இப்புறமுமாக நின்று வியப்புடன் ரசித்தனர். குறிப்பிட்ட சில அடி தூரம் மட்டும் மழை பொழியும் வகையிலான மேகங்களை அத்தனை எளிதில் கணித்து சொல்ல முடியாது எனவும், ராடார் கருவிகளில் இது பதிவாகாது எனவும் வானிலை ஆய்வாளர்கள் கருத்து  தெரிவிக்கின்றனர்.

மழை


காணக்கிடைக்காத அரிதான இந்த நிகழ்வை வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்தனர். ஐதராபாத் நகரில் ஆகஸ்ட்   27 ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக தெலங்கானா வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web