சென்னை உட்பட 11 மாவட்டங்களில் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!
சென்னை, செங்கல்பட்டு உட்பட இன்று மதியம் 1 மணி வரை 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து நாளை நவம்பர் 30ம் தேதி கரையைக் கடக்கிறது.
இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என்றும் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால் கடலூர் மாவட்டத்திற்கு இன்று நவம்பர் 29ம் தேதி ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உட்பட 11 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் , ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!