சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளில் வானிலை மாறுபட்ட நிலையில் காணப்படுகிறது.

வடகிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி திங்கள்கிழமை அதிகாலையில் வலுவிழந்தது. இதேசமயம், மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய மியான்மர் கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மியான்மர்–பங்களாதேஷ் கடற்கரை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் தாக்கத்தால் தமிழகத்தின் சில பகுதிகளில், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்று முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. தற்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரம் வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நகரின் சில பகுதிகளில் இடி, மின்னல் சேர்ந்து மழை பெய்ய வாய்ப்பும் உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!
