தமிழகத்தில் செப்.6ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு... காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

 
மழை

மழைக் காலங்களில் மின் சாதனங்களை ரொம்பவும் பாதுகாப்பாக பயன்படுத்துங்க. அவசியமில்லாமல் கூடுமானவரை சிறுவர்களையும், முதியவர்களையும், கர்ப்பிணிகளையும் தனியே வெளியில் அனுப்பாதீங்க. இன்று முதல் தமிழகத்தில் வரும் செப்டம்பர் 6ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மழை

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடலில் வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரைப் பகுதிகளில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மையம் கொண்டுள்ளது.

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை! வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி!

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மற்றும் கோபால்பூருக்கு இடையே கலிங்கப்பட்டணம் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 6 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

From around the web