ராமேஸ்வரம் கோவிலுக்குள் புகுந்த மழை நீர்... பக்தர்கள் கடும் அவதி!!

 
ராமேஸ்வரம் கோவில்

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்தது.  தொடர் கனமழை காரணமாக ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.இதனால் கோவிலில் இருந்த  பக்தர்கள் கடும்அவதிக்குள்ளாகினர். அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது

ராமேஸ்வரம் கோவில்

அதன்படி  ராமேஸ்வரம் திட்டக்குடி, வேர்கோடு, புதுரோடு, தெற்கு வாசல் வீதி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது.ராமேஸ்வரம் 3ம் பிரகாரத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தண்ணீரில் நடந்து சென்றனர்.

ராமேஸ்வரம் கோவில்

 அதே போல்  கன்னியாகுமரி மாவட்டம் குமரிமுனை, தென் தாமரை குளம், சின்னமுட்டம், கோட்டாரம், மருங்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதேபோல் திங்கள்சந்தை, குளச்சல், திருவட்டாறு, குலசேகரம், மாத்தூர் சுற்றுவட்டாரங்களில் மீண்டும் மழை பெய்து வருகிறது. இதனால்  சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பகல் நேரத்திலேயே எதிரில் வரும் வாகனங்கள் கூட தெரியாமல் சாலையில் சென்ற வாகனங்களில்  முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web