சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளராக ராஜ் பொறுப்பேற்பு!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் புதிய காவல் ஆய்வாளராக ராஜ் பொறுப்பேற்று கொண்டார்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ஏசு ராஜசேகரன் நாகர்கோவில் உள்ள காவல் நிலையத்தில் பணி புரிந்த போது முறைகேட்டில் ஈடுபட்டதாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின்னர் குமரி போலீசாரில் கைது செய்யப்பட்டார். அதன்பின் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் நியமிக்கப்படாமல் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி, கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தார்.
இந்நிலையில் ஓட்டப்பிடாரம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த ராஜ், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். அவர் நேற்று சாத்தான்குளம் ஆய்வாளராக பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!