ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது... அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

 
 நடிகர்   ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. ரஜினிகாந்திற்கு பெரிய அளவிலான அறுவை சிகிச்சைகள் எதுவும் செய்யப்படவில்லை. அவருக்கு அச்சப்படக் கூடிய அளவில் எதுவும் இல்லை. திட்டமிட்ட மருத்துவ பரிசோதனைகளே நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

முன்னதாக நேற்றிரவு நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடலநலக் குறைவு காரணமாகவும், வயிற்றில் வீக்கம் ஏற்பட்டுள்ளதாலும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை!! ரஜினிகாந்த் உருக்கம்!!

நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்துள்ள நிலையில், தற்போது பட வெளியீடு மற்றும் ‘கூலி’ படத்தின் பணிகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் திடீர் வீக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில் நேற்றிரவு 10.30 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இன்று நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள்!! நள்ளிரவில் கேக் கட்டிங்! வைரலாகும் புகைப்படங்கள்!!

சீரற்ற ரத்த ஓட்டம் மற்றும் செரிமான பிரச்சனை காரணமாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இதயம் சம்பந்தமான சிகிச்சைக்கு ஏற்கெனவே மருத்துவ பரிசோதனைக்கு திட்டமிட்டிருந்த நிலையில், இன்று  காலை மூத்த மருத்துவர்களின் குழு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ள உள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. கேத் லேப் மூலம் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டங்கள் சீராக உள்ளதா என்றும் இன்று காலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

ரஜினிகாந்தின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும். மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின்னர் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை

From around the web