சந்தோஷத்தால் நிரம்பி வழியும் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு! காரணம் இது தான்!

 
சந்தோஷத்தால் நிரம்பி வழியும் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு! காரணம் இது தான்!


தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் உடல் நலக்குறைபாட்டை சரிசெய்ய அமெரிக்கா சென்றிருந்தார். தற்போது சென்னை திரும்பியுள்ளார். புத்துணர்ச்சியுடன் ரசிகர்களின் கொண்டாட்டம், அண்ணாத்தே ரிலீஸ் வேலைகள், மகள்கள் மகிழ்ச்சியாக குடும்ப வாழ்க்கையில் இருப்பது என ரஜினியும் மீண்டும் உற்சாகமாய், பழைய அரசியல் சறுக்கல்களை மறந்து விட்டு வாழ்க்கையை என்ஜாய் செய்து வருகிறார்.

சந்தோஷத்தால் நிரம்பி வழியும் ரஜினியின் போயஸ் கார்டன் வீடு! காரணம் இது தான்!

இவரின் இளைய மகள் சௌந்தர்யா கர்ப்பமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சௌந்தர்யா , விசாகன் தம்பதிக்கு விரைவில் குழந்தை பேறு கிடைக்கவுள்ள நிலையில், நான்காது முறையாக தாத்தா ஆகிறார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கும் – வஞ்சகர் உலகம் படத்தில் நடித்த விசாகனுக்கும் 2019ல் திருமணம் நடந்தது.


மகள் கர்ப்பமடைந்த செய்தி கேட்டு ரஜினிகாந்த் மிகவும் சந்தோஷமடைந்துள்ளாராம். வீட்டில் பணியாற்றும் அனைவருக்கும் ஊக்கத்தொகையும் கொடுத்துள்ளார். இந்த வருட முடிவில் சௌந்தர்யாவுக்கு குழந்தை பிறக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு 5 வயதில் வேத் என்கிற மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது

From around the web