8 மாதங்களில் 15 முறை கடித்த எலி.. கை,கால் செயலிழந்து தவிக்கும் 10ஆம் வகுப்பு மாணவி!

 
பவானி கீர்த்தி

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள அரசு விடுதியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவிக்கு தொடர்ந்து 15 முறை எலி கடித்ததால் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கம்மம் தானவாய்குடத்தில் உள்ள பி.சி நலவாழ்வு விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவி லட்சுமி பவானி கீர்த்தி. கடந்த மார்ச் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 8 மாதங்களில் 15 முறை எலி கடித்ததால் வலது கால் மற்றும் கை செயலிழந்துள்ளது.


ஒவ்வொரு முறை கடித்த போதும் அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து எலி கடித்ததால் லட்சுமிக்கு பக்கவாதம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். முன்னாள் அமைச்சர் புவ்வாடா அஜய் குமாரின் தலையீட்டால் மாணவி தற்போது மம்தா பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எலி

லட்சுமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு குணமடைந்து வரும் நிலையில், அவருக்கு நரம்பியல் பிரச்னை இருப்பதாக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு விடுதிகளின் நிலைமைகள் குறித்து ஆளும் காங்கிரஸ் அரசை பிஆர்எஸ் கட்சி விமர்சித்துள்ளது.

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web